சென்னை மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு கடந்த ஜூலை 4-ம் தேதி லண்டனிலிருந்து 2 கண்டெய்னரில் 39 டன் எடையுள்ள வெள்ளி கட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டது. அந்த வெள்ளி  கட்டிகள் லண்டனில் இருந்து கப்பல் மூலமாக மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப் பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்துக்கு சென்றது.

பின்பு அங்கிருந்து ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வைத்து ஆய்வு செய்ப்ட்டது. அந்த கண்டெய்னரில் வந்த 30 வெள்ளிக்கட்டிகளின் மதிப்பு சுமார் 9 கோடி எனவும் அதன் மொத்த எடை 922 கிலோ எனவும் கூறப்படுகிறது . இந்த நிலையில் கண்டெய்ணரில் இருந்த வெள்ளிக்கட்டிகள் திடீரென காணாமல் போனது.

இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. மேலும் கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த துறைமுகத்தில் வேலைபர்க்கும் நவீன் குமார், ஆகாஷ், எபிநாத், தேசிங்கு, குணசீலன், சந்தோஷ், வெங்கடேஷ், சண்முகவேல், முத்துராம், அப்துல் கரீம் மற்றும் முனியாண்டி ஆகிய  12 பேரும் சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வெள்ளிக் கட்டிகளை திருடியதாக ஒப்புக்கொண்டனர். எனவே அவர்களிடம் இருந்த வெள்ளிக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்த 12 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.