ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கொடுமுறு 7-வது மலையில் பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. தெலுங்கு மாதத்தின் 3-வது திங்கட்கிழமை ஆன நேற்று பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனத்திற்காக வந்தனர். பக்தர்களை மலை இடுக்குகளில் உள்ள தேள்களை தேடி பிடித்து நூல்களில் மாலையாக கட்டினர். பின்னர் வெங்கடேஸ்வர சுவாமிக்கு அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர்.

தேள்களை பிடித்து மாலையாக கட்டும் பக்தர்களுக்கு தேள் கொட்டவில்லை. பொதுவாக பக்தர்கள் சுவாமிக்கு பட்டு, மலர்மாலை மற்றும் ஆவரங்களை அணிவித்து பூஜைகள் செய்வது வழக்கம். ஆனால் இங்கு தேள்மாலை அணிவித்தால் வேண்டிய வரங்களை நிறைவேற்றி தருவார் என்பது ஐதீகம். இதேபோன்று சில பக்தர்கள் தேள்களை பிடித்து தங்களது முகம், தலை கைகளில் வைத்து நூதன முறையில் வழிபட்டனர்.