பாகிஸ்தானில் இருந்து ஒரு சுவாரசியமான மற்றும் தத்துவமான காதல் கதை வெளியாகி உள்ளது. அதாவது சமன் என்ற இளைஞரும், ஈசன் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சமன், ஈசனின் பெற்றோரிடம் திருமணத்தைக் குறித்து பேசி உள்ளார். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் சமன் தனது மாமனாருக்கு ஒரு ரெட்மி டச் மொபைல் போனை வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவரது மாமனார் அவர்களது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். பெண்ணின் தந்தை மொபைலுக்கு ஈடாக வேற எதுவும் கேட்டாரா என்று கேள்வி கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டே ஆம் நிச்சயமாக ஒரு நிபந்தனை உள்ளது என்று கூறினார்.
அவர்களுக்கு முதல் குழந்தை பிறக்கும் போது அவர்கள் வைஃபை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறினார். மேலும் தங்கள் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசிப்பதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
