நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, கர்பா நடன பந்தலில் திடீரென ஒரு மாடு புகுந்ததால் பெரும் கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று, நடன நிகழ்ச்சியின் மத்தியில் மாடு தற்செயலாக நுழைந்ததாகக் கூறுகிறது.
இதனால், கர்பா ஆடிக் கொண்டிருந்தவர்கள் பதறியடித்து ஓடினர். இந்த வீடியோவில், ஸ்பைடர்மேன் உடையில் ஒருவர் மாட்டை அடக்க முயன்று, மாடு அவரை துரத்தியதால் ஓடி ஒளிந்த காட்சி இணையவாசிகளை சிரிக்க வைத்துள்ளது.
View this post on Instagram
வீடியோவில், நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே மாதிரியாக கர்பா ஆடிக் கொண்டிருக்கும் போது, திடீரென மாடு பந்தலுக்குள் புகுந்து, அனைவரும் அலறியடித்து சிதறி ஓடுவது பதிவாகியுள்ளது.
இந்த குழப்பத்தின் மத்தியில், ஸ்பைடர்மேன் உடையணிந்த ஒருவர் மாட்டை திசைதிருப்ப முயற்சிக்கிறார். ஆனால், மாடு அவரை நோக்கி பாய்ந்ததும், அந்த “சூப்பர் ஹீரோ”வும் ஓடி தப்பிக்கிறார், இது இணையத்தில் பெரும் கேலிக்கு உள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், பந்தலில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த வீடியோவை “ஸ்பைடர்மேன்: இன்டு தி கர்பா-வெர்ஸ்” என நெட்டிசன்கள் கிண்டல் செய்து, சிலர் ஸ்பைடர்மேனின் தைரியத்தை பாராட்ட, மற்றவர்கள் இந்த நகைச்சுவையான தோல்வியை ரசித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
