மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, வரவிருக்கும் தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய சசிகலா, மதுரையில் தனது அரசியல் பயணத்தை மீண்டும் வலுவாகத் தொடங்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
