
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் பகுதியில் கழிவுநீரை வெளியேற்றுவதற்காக சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த சுரங்கம் 18 மீட்டர் அகலத்தில், ரூ 60 ஆயிரம் கோடி செலவில் பல தொழிலாளர்களை வைத்து பணி நடைபெற்று வந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் 75 % பணி நிறைவடைந்த நிலையில் சுரங்கம் தோண்டுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்து விட்டது. இதனால் அதிக அளவில் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு பணி வெகு விரைவாக நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 31 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். இந்த தகவல் மீட்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுரங்கத்தில் சிக்கிய 31 தொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.