பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவி ஒருவர், திடீரெனப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் நெஞ்சைப் பதறவைத்துள்ளது. அந்த வீடியோவில், சீருடை அணிந்த மாணவி ஒருவர் பாலத்தின் மீது நடந்து வரும்போது, ஒரு கணம் கூடத் தயங்காமல் திடீரென ஆற்றில் குதிப்பதை உணர முடிகிறது.
स्कूल से लौटती एक नाबालिग छात्रा
चलते-चलते पुल से नदी में कूद गई।
घटना सीसीटीवी में कैद हैलेकिन आख़िरी वजह अब तक साफ़ नहीं है।
ये घटना याद दिलाती है कि
बच्चों की मानसिक सेहत उतनी ही ज़रूरी है
जितनी उनकी पढ़ाई।समय पर बात सुनना और सहारा
कई ज़िंदगियाँ बचा सकता है। pic.twitter.com/IiXlqKZnEf— Er. Aamir malik (@AamirMalick605) January 16, 2026
பாலத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் மாணவியைக் காப்பாற்ற ஓடிச் செல்வதற்குள் அவர் நீரில் மூழ்கினார். இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாகத் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு ஆற்றில் மீட்புப் பணியில் ஈடுபட முயன்றனர்.
மாணவியின் இந்தத் தீவிர முடிவிற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், குழந்தைகளின் மனநலம் மற்றும் அவர்களுக்குத் தேவையான உணர்வுப்பூர்வமான ஆதரவு குறித்து இந்தச் சம்பவம் இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
