ஹைதராபாத் சரத் சிட்டிமாலில் உள்ள calvin kelin கடையில் பணிபுரியும் ஊழியர் நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அந்த பெண் வாடிக்கையாளர் ஹைதராபாத் மாலில் உள்ள calvin kelin கடைக்கு சென்ற பொது அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் தனது தோற்றத்தை பார்த்து சிரித்ததாகவும், அது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் பதில் கூற மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் கடையில் சில குழந்தைகள் காபி குடித்துக் கொண்டிருந்ததை பார்த்து அந்தப் பெண் ஊழியர் கடுமையான முறையில் நடந்து கொண்டதாகவும், அந்த குழந்தைகளை வெளியே செல்லுமாறு கூறியதால், கோபமடைந்து தனது காபியை ஊழியர்களை நோக்கி வீசியதாகவும் வீடியோவில் பெண் வாடிக்கையாளர் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shaikh maryam Ali (@iam.maryamalyyy08)

அதனால் தனது உடையில் சில காப்பி சிதறல்கள் பட்டுள்ளதால் அதனை கழிப்பறையில் சுத்தம் செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ பதிவில், calvin kelin பிராண்ட் நிறுவனர் தங்களது ஊழியர்களின் நடத்தைகளை கவனித்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுபோன்று இதுவரை யாரும் தன்னிடம் நடந்து கொண்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.