காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாஜக எம்.பி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நம் நாட்டை மரியாதை குறைவாக பேசிய ராகுல் காந்தியை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாஜக கட்சியின் எம்.பி சாத்வி பிரக்யா தாகூர் கூறியுள்ளார்.
அதன்பிறகு வெளிநாட்டு பெண்ணுக்கு பிறந்த குழந்தை ஒருபோதும் தேசபக்தனாக மாற முடியாது என சாணக்கியர் கூறியுள்ளார். அந்த வாசகம் உண்மைதான் என்பதை தற்போது இத்தாலி தாயிக்கு பிறந்த ராகுல் நிரூபித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.