தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களால் தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறார். இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் அரசியல் வாழ்வில் சிறு களங்கம் கூட கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் துணை ஜனாதிபதியாக உயர்ந்தவர் வெங்கையா நாயுடு. அரசியல் பயணத்தில் அவர் மீது ஒரு சிறு களங்கம் கூட கிடையாது. அவர் என்னுடைய நல்ல நண்பர். அனைவராலும் மதிக்கப்படுபவர் என்றார்.