பீகார் மாநிலத்தின் ரோட்டாஸ் மாவட்டத்தில் வேகமாக வந்த தார் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்ற பெண்மீதும், சாலையோரத்தில் அமர்ந்திருந்தவர்கள்மீதும் மோதிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விபத்தில் பபிதா தேவி(40) என்ற பெண் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், பெண் ஒருவர் நடந்து செல்லும் நேரத்தில் வேகமாக வந்த தார் கார் நேராக மோதும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளத்தாக்கில் சிதறிச் சென்றனர். காரும் அந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் “மிகவும் சோகமான சம்பவம்” என தெரிவித்துள்ளனர்.
तेज रफ्तार थार ने मचाई तबाही – एक महिला की मौत, तीन लोग गंभीर रूप से घायल।
रोहतास जिले के काराकाट का मामला, CCTV में क़ैद हुई दुर्घटना की दर्दनाक तस्वीर। pic.twitter.com/BbEh2UscNp— saket singh (@Saket82Singh) August 3, 2025
சத்தம் கேட்ட மக்கள் விரைந்து ஓடி வந்து காயமடைந்தவர்களுக்கு உதவி செய்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். தார் காரில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு குற்றவாளிக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தார் கார் ஓட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மதுபோதையில் இருந்தாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்தச் சம்பவம் போன்றவை மீண்டும் நடக்காமல் இருக்க, அரசு மற்றும் காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
