உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு விசித்திரமான வீடியோ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒரு முடி வெட்டும் நபர், வாடிக்கையாளரின் தலைமுடியை வெட்டிய பிறகு அதை தன் உணவுடன் கலந்து சாப்பிடுகிறார். இந்த சம்பவம் அவர் வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெறும் நோக்கத்தில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
it’s amazing… you can literally just post a daily life video from their subcontinent, and they will report you in the thousands pic.twitter.com/QI22J4iRFc
— KekMagician🫘🆙 (@KequeMage) August 3, 2025
வீடியோவில், முடி வெட்டும் கடையில் உள்ள ஒருவர், ஒரு வாடிக்கையாளரின் முடியை வெட்டி, அதை தன் சாப்பாடு தட்டில் வைத்து, உருளைக்கிழங்கு – பட்டாணி மசாலா உணவுடன் கலந்து, அதை சாப்பிடுகிறார். அவருடைய செயலை அருகில் உள்ளவர்கள் மற்றும் வீடியோ பதிவுசெய்த நபர் பார்த்து பரபரப்பாக பேசும் சத்தங்களும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், பலரும் அதிர்ச்சியில் கருத்துக்களை பதிவிட்டனர். ஒருவர், “இது நான் பார்த்த இதுவரையிலான எல்லா வீடியோக்களிலும் மிகக் கேவலமானது!” என தெரிவித்தார். இன்னொருவர், “இதைப் பார்த்தவுடன் வாந்தி வந்துவிட்டது,” என பதிவிட்டுள்ளார். “முடி சாப்பிடுற மாதிரி விஷயத்துக்கு நம்பிக்கை வேண்டாம்னு சொல்லிவைங்க!” என மேலும் ஒருவர் விமர்சித்துள்ளார்.
மனிதனின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வதற்காக இப்படியான செயலில் ஈடுபடுவது மிகவும் அவமானகரமானதும், சுகாதார ரீதியாகவும் ஆபத்தானதுமானது என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுபோன்ற செயல்கள் சமூகத்தில் தவறான செய்தியை பரப்பும் வகையில் இருக்கக்கூடாது என்பதே பெரும்பாலோரின் அபிப்பிராயமாக உள்ளது.
