சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், தாயின் சொத்தை தனது பெயருக்கு மாற்றிக்கொள்ள முயற்சித்த மகனுக்கு அந்தத் தாய் புத்திசாலித்தனமாக பதிலடி கொடுத்த நிகழ்வு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வீடியோவில், மகன் தனது தாயிடம் “இந்த ரேஷன் கார்டில் கையொப்பமிடுங்கள்” என்று கூறுகிறார். உண்மையில், அவன் தாயின் சொத்தை தனது பெயரில் பதிவு செய்யும் திட்டம் திட்டமிட்டு செயல்பட முயற்சிக்கிறார். தாயும் எதையும் சந்தேகிக்காமல் கையொப்பமிடுகிறார். மகன் மகிழ்ச்சியுடன், “இப்போ இந்த சொத்து என் பேர்லா ஆகிடுச்சு!” எனச் சொல்கிறார்.
இந்தக் காட்சிக்கு எதிரான பதிலடியாக, தாய் மிகவும் சீரான புன்னகையுடன், “ஆமாம், ஆனா இந்த சொத்தில் 2 கோடி ரூபாய் கடன் இருக்கு. இனி அதை நீ தான் கட்டணும்!” என்று பதிலளிக்கிறார். இதைக் கேட்ட மகன் அதிர்ச்சியில் தலையைப் பிடித்து அமர்கிறார். இந்த வீடியோ its_ankita_yogi என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மக்களின் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட நகைச்சுவை சார்ந்த வீடியோவாக இருந்தாலும், அதன் பின்னணி செய்தி மிகவும் வலிமையானது.
View this post on Instagram
“>
இந்த காணொளிக்கு பலரும் நகைச்சுவையான மற்றும் பாராட்டும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். “அம்மா ஜி சூப்பர்!”, “தந்திரத்துக்கு தந்திரம் தான் சரியான பதிலடி!” என பலரும் கருத்து பகிர்ந்துள்ளனர். வீடியோவில் கூறப்படும் வார்த்தைகளும், மகன்-தாய் இடையே நடைபெறும் உரையாடலும், பல குடும்பங்களில் நிகழும் சொத்துச் சிக்கல்களை நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறது. தந்திரத்தால் எல்லாம் கைப்பற்ற முடியாது, புத்திசாலித்தனமும் நேர்மையும் வெற்றிகரமாகும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த வீடியோ பரபரப்பாகப் பரவி வருகிறது.
