குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் 35 வயதான பெண் ஒருவர் கீழே அமர்ந்து தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார் ஒன்று பெட்ரோல் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றது. அப்போது அந்தப் பெண் கீழே அமர்ந்திருந்து சுத்தம் செய்வதை பார்க்காத டிரைவர் பெண்ணின் மீது காரை ஏற்றி இறக்கினார். இதனால் அந்த பெண் அலறிதுடிக்க அங்கிருந்த பங்க் ஊழியர்கள் சத்தம் போட்டனர். இதில் அந்தப் பெண்ணுக்கு வலது கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
https://www.instagram.com/reel/DMZtcfYgQq9/?igsh=cWhycDF6ZjI2bjVm
இதை அடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த டிரைவர் நிற்காமல் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
