ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலமாக அழித்தது. இதனால் பாகிஸ்தானும் பதிலடி தாக்குதல் கொடுத்த நிலையில் கிட்டத்தட்ட மூன்று நாட்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது.
அதன்பிறகு இந்த போர் முடிவுக்கு வந்த நிலையில் சிந்து நதிநீர் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தடைகளை இந்தியா பாகிஸ்தான் மீது விதித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவின் வான் பரப்பை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் பரப்புக்குள் நுழைய தடை விதித்து உத்தரவு வெளியாகியுள்ளது. இதேபோன்று பாகிஸ்தானும் இந்திய விமானங்கள் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை பாகிஸ்தான் வான் பரப்புக்குள் நுழைய தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
