இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ ஒன்று இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வெளிநாட்டவர், இந்திய உணவான பூரி-சப்ஜியை கைகளால் சாப்பிடாமல், சாப்ஸ்டிக் (Chopsticks) பயன்படுத்தி சாப்பிடும் காட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்த இந்த வீடியோவில், அவரது கொரிய நண்பர் யூ (Yoo) முதல் முறையாக இந்திய உணவை முயற்சிக்கிறார். வீடியோவில், பூரியை சாப்ஸ்டிக்கால் எடுத்து, ஸ்பூன் மற்றும் சாப்ஸ்டிக்கால் உடைத்து, ஆலு சப்ஜியை பூரியில் வைத்து சாப்பிடும் அவரது முயற்சி 65 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Akarshik Banerjee (@akarshik)

இந்த வீடியோவுக்கு இந்தியர்களிடையே கலவையான எதிர்வினைகள் குவிந்துள்ளன. “இது சட்டப்படி குற்றமா?” என்று ஒருவர் கிண்டலாக கருத்து தெரிவிக்க, “என் கொரிய கணவர் கூட கையால் தான் இந்திய உணவு சாப்பிடுவார்” என்று மற்றொருவர் கூறினார். “10 நிமிட வேலையை 1 மணி நேரத்தில் முடிக்கிறார்” என்று ஒரு நகைச்சுவை கருத்தும் பதிவாகியுள்ளது.

பூரி-சப்ஜி போன்ற பாரம்பரிய இந்திய உணவை கைகளால் சாப்பிடுவதே சுவையானது என நம்பும் இந்தியர்கள், சாப்ஸ்டிக்கால் சாப்பிடும் இந்த முயற்சியைப் பார்த்து வேடிக்கையாகவும், ஆச்சரியமாகவும் உணர்ந்துள்ளனர். இந்த வைரல் வீடியோ, இந்திய உணவு மீதான உலகளாவிய ஆர்வத்தையும், அதை சாப்பிடும் வித்தியாசமான முறைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.