கலை உலகில் யதார்த்தமான (ரியலிஸ்டிக்) ஓவியங்களுக்கு தனி இடம் உண்டு, ஆனால் ஒரு கலைஞர் தரையில் உணவு நிறைந்த தட்டை ஓவியமாக வரைந்து, பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளார்.
சாதாரணமாக தண்ணீர் குவளை, பழங்கள் அல்லது மலர்களை யதார்த்தமாக வரைவது வழக்கம், ஆனால் இந்த கலைஞர் ஒரு முழு உணவு தட்டையே தத்ரூபமாக உருவாக்கி, கற்பனை மற்றும் உழைப்பின் அவசியத்தை நிரூபித்துள்ளார். இந்த வீடியோ, இணையத்தில் பரவி, பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
வீடியோவின் தொடக்கத்தில், ஒரு கலைஞர் தரையில் குனிந்து ஏதோ செய்வது போல் தெரிகிறது. முதலில், அவர் என்ன செய்கிறார் என புரியவில்லை, ஏனெனில் அவர் கையில் வண்ணங்களும், தூரிகையும் வைத்திருந்தாலும், அது சாதாரண ஓவியமாகவே தோன்றுகிறது. ஆனால், சில நிமிடங்களில், அவர் வரைந்தது ஒரு அசத்தல் உணவு தட்டு என்பது தெளிவாகிறது.
அதில் அரிசி, பருப்பு, காய்கறிகள், ரொட்டி, இனிப்பு என அனைத்தும் உண்மையான உணவு போலவே தத்ரூபமாக தோற்றமளிக்கிறது. இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் ‘_timepass_789’ கணக்கில் பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் பார்த்து, “பசி எடுக்க வைக்கிறது”, “இவ்வளவு உண்மையாக வரைந்த கலைஞருக்கு பாராட்டுகள்” என கருத்துகளை பதிவு செய்து, வியந்து புகழ்ந்து வருகின்றனர்.
