நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவிற்கு இடையே, இணையத்தில் வெளியாகியுள்ள இரு சிறு குழந்தைகளின் நெஞ்சை உருக்கும் புகைப்படம் உலகெங்கிலும் உள்ள மக்களின் கண்களைக் குளமாக்கியுள்ளது.
அந்தப் புகைப்படத்தில், பேரழிவால் உருக்குலைந்த ஒரு கிராமப் பகுதியில் அழுக்கு படிந்த முகத்தோடு இருக்கும் ஒரு சிறுவன், காயமடைந்து தவிக்கும் தனது குட்டித் தங்கையைத் தனது முதுகில் சுமந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறான்.
ஆபத்தான அந்தச் சூழலிலும் தன் தங்கையைக் கைவிடாமல், அவளுக்கு ஒரு தாயைப் போல அரணாக நின்று காணாமல் போன பெற்றோரை அந்தப் பிஞ்சு குழந்தைகள் தேடி அலைவது காண்போரின் இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது.
குழந்தைகளின் முகத்தில் அப்பட்டமாகத் தெரியும் பயமும் காயங்களும் அந்தப் பேரிடர் அவர்களுக்குக் கொடுத்துள்ள துயரத்தின் ஆழத்தை உணர்த்துகின்றன. எந்தவொரு குழந்தையும் சுமக்கக் கூடாத பெரும் பொறுப்பைத் தன் தங்கைக்காக அந்தச் சிறுவன் ஏற்றுக்கொண்டு துணிச்சலுடன் செயல்படுவதைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுப் பெற்றாரைப் பிரிந்து தவிக்கும் இந்த பிஞ்சு குழந்தைகள் இருவரும் விரைவில் தங்களது பெற்றோருடன் பாதுகாப்பாக இணைய வேண்டும் என்று இணையவாசிகள் பலரும் பிராத்தித்து வருகின்றனர்.
