மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிசியோதெரபி கல்லூரியில், மாணவி ஒருவரை வகுப்பறையில் நிற்க வைத்ததாகக் கூறி, பேராசிரியராகப் பணியாற்றி வரும் மருத்துவரை பெற்றோர் தாக்கிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான கண்காணிப்புக் கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பார்லி பகுதியில் இயங்கி வரும் இந்தத் தனியார் பிசியோதெரபி கல்லூரியில், ஆகஸ்ட் 28 அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தனது மகளை வகுப்பில் வேண்டுமென்றே நிற்க வைத்து அவமானப்படுத்தியதாகக் கூறி, மாணவியின் தந்தை மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருடன் வந்த மற்றொரு நபர், மருத்துவரைத் திடீரெனக் கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயன்றும், அந்த நபர் மருத்துவரைத் தொடர்ந்து தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலின் போது மாணவியும் அங்கிருந்து சண்டையைத் தடுக்க முயன்றது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினரின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

சமீபகாலமாக மகாராஷ்டிராவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் எலும்பு சிகிச்சை மருத்துவர் ஒருவர் நோயாளியின் மகனால் தாக்கப்பட்ட சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.

Tension gripped Bhanu Jyot Hospital in Kalyan East, Thane, after a doctor was allegedly assaulted in his cabin by a patient’s relative on Saturday night. CCTV footage of the incident has surfaced, and Kolsewadi Police have registered a case. pic.twitter.com/X31YBm7H5A

— Tushar (@tusshar_jadon) August 23, 2026

“>

அதேபோல டோம்பிவ்லி பகுதியில் பெண் மருத்துவர் மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் மருத்துவ உலகைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மருத்துவமனைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.