உண்மையான அன்பிற்கு எந்த நிபந்தனைகளும் தடைகளும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில், திருமண நிகழ்வு ஒன்றில் மாற்றுத்திறனாளி கணவருக்காக மணப்பெண் ஆடிய நடனக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் இதயங்களையும் கவர்ந்து வருகிறது.

பாரம்பரிய உடையில் கழுத்தில் மாலையுடன் நின்றுகொண்டிருந்த மணமகன், ஊன்றுகோல்களின் உதவியுடன் நின்றபடி தன் மனைவியின் நடனத்தைக் கண்டு புன்னகைக்கிறார். தன் வாழ்வின் புதிய தொடக்கத்தை எண்ணி அவரது முகத்தில் வெளிப்படும் பேரானந்தம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

சிவப்பு நிற ஆடையில் மிளிரும் மணப்பெண், எந்தவித தயக்கமுமின்றித் தன் கணவர் முன்னிலையில் பேரார்வத்துடன் நடனமாடுகிறார். அவர் தானாக அசைந்தாடுவது மட்டுமின்றி, தன் கணவரையும் அந்த மகிழ்ச்சியான தருணத்தின் ஒரு அங்கமாக மாற்றி, ஒத்த திருமணச் சூழலையும் உற்சாகப்படுத்தினார்.

வெளிப்படையான அன்பும் பேரானந்தமும் நிறைந்த இந்தச் சிறப்புத் தருணம் இணையவாசிகளின் கண்களில் ஆனந்தக் கண்ணீ வரவழைத்துள்ளது. இருவருக்கும் இடையிலான இந்த ஆழமான பிணைப்பு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by 🌸vimlesh🦋 (@mohini5march)

“>

இந்தக் காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள், “உண்மையான அன்பு இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்றும், பௌதீகச் சூழ்நிலைகளைக் கடந்து இதயங்களின் அழகைக் காண்பதே உண்மையான உறவு என்றும் தம்பதியரைப் பாராட்டி வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.