நேபாள நாட்டின் ரசுவா பகுதியில் அமைந்துள்ள போட்டோ கோஷி நதியின் துணை நதியான பகுதியில்  ஏற்பட்ட திடீர் ப்ளாஷ் ஃபிளட்  எனப்படும் ஆக்ரோஷ வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது . வடக்கு நேபாளத்தில் நிகழ்ந்த இந்தச் சதிவெள்ளப் பெருக்கிற்குக் கிளேசியர் எனப்படும் பனிப்பாறைகளில் ஏற்பட்ட திடீர் சரிவு மற்றும் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுமே முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆற்றுப் பாதையில் உருவான பிரம்மாண்டமான தடை திடீரென உடைப்பெடுத்து அடித்துச் சென்றதில், அப்பகுதியே சில விநாடிகளில் சுவடு தெரியாமல் மாறியுள்ளது.

இந்த இயற்கைப் பேரிடரின் கோரத் தாக்கத்தைக் காட்டும் பல அதிர்ச்சி வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன. அதில், சுற்றுலாத் தலம் ஒன்றில் தங்கியிருந்த பயணிகள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஹோட்டல்களை விட்டு வெளியேறித் தப்பியோட முயன்ற போதிலும், அதற்குச் சற்றும் அவகாசம் தராமல் ராட்சத அலைபோலப் பாய்ந்து வந்த வெள்ளம் எல்லாவற்றையும் கண் இமைக்கும் நேரத்திற்குள் இழுத்துச் சென்ற பதைபதைப்பான காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்தத் திடீர் பெருவெள்ளத்தால் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், வெளிநாட்டினர் மற்றும் இந்தியர்கள் உள்பட நூற்றுக்கணக்கான பயணிகள் என்ன ஆனார்கள் என்ற விபரம் தெரியாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய-நேபாள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர எச்சரிக்கையுடன் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.