சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு விசித்திரமான திருமண விளம்பரம், இணையவாசிகளையும் திருமணமாகாத இளைஞர்களையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகத் திருமண விளம்பரங்களில் அரசு வேலை, நல்ல சம்பளம் மற்றும் குடும்பப் பின்னணியையே எதிர்பார்ப்பார்கள். ஆனால், சமூக ஊடகப் பிரபலமான ரியா என்ற பெண், தனது வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்க விசித்திரமான சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

அந்த விளம்பரத்தின்படி, மணமகனுக்குக் கேமரா பயம் இருக்கக் கூடாது என்றும், மனைவியுடன் சேர்ந்து ‘ரீல்ஸ்’ மற்றும் வீடியோக்களை உருவாக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், “மொய்-மொய்” போன்ற ட்ரெண்டிங் பாடல்களுக்கு ஏற்ப புதுமையான வீடியோ ஐடியாக்களை உருவாக்கும் திறன் அந்த நபருக்கு இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், வருங்காலக் கணவருக்குப் ‘பிரீமியர் ப்ரோ’ போன்ற சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி வீடியோக்கள் மற்றும் வ்லாக்குகளை எடிட் செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மணமகன் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னைத் தொடர்புகொள்வதற்கு முன்பாக, தனக்கு எத்தகைய ஆண்களைப் பிடிக்காது என்பதைத் தெரிந்துகொள்ள ‘ஹாஃப் லவ் ஹாஃப் அரேஞ்ச்ட்’ என்ற வெப் தொடரைப் பார்க்குமாறும் அந்தப் பெண் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விளம்பரத்தின் ஸ்கிரீன்ஷாட் இன்ஸ்டாகிராமில் வெளியாகித் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Finding Good Ads | Marketing | Advertising (@findingoodads)

“>

இந்த விளம்பரத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் வேடிக்கையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “இது திருமண விளம்பரம் இல்லை, சம்பளம் இல்லாத வேலை வாய்ப்பு விளம்பரம்” என்றும், “இவருக்குக் கணவன் வேண்டுமா அல்லது வீடியோ எடிட்டர் வேண்டுமா?” என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.