சட்டப்பேரவையில் நேற்று பேசிய தவெக அமைச்சர் பிரபு, மணல் மற்றும் மண் அள்ளும் விவகாரத்தில் நடந்துள்ள மிகப்பெரிய முறைகேடுகள் மற்றும் கணக்கு முரண்பாடுகளைப் புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு சாதாரண மண் மற்றும் களிமண்  விற்பனை மூலம் அரசுக்கு ரூ.32.34 கோடி வருவாய் கிடைத்ததாகவும், அதனுடன் கூடுதலாக ரூ.28.8 கோடி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட கனிம அளவுகளின்படி, சுமாராக 60 லட்சம் மெட்ரிக் டன்கள் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

ஆனால், மறுபுறம் அரசு சார்ந்த கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட மண்ணின் அளவு சுமார் 3.6 கோடி மெட்ரிக் டன்கள் ஆகும். இது அரசுப் பணிகளுக்கான பயன்பாடு மட்டுமே என்றாலும், தனியார் நிறுவனங்களும் தனிநபர்களும் பயன்படுத்திய அளவு சுமார் 6 கோடி மெட்ரிக் டன்களாகும்.

அரசு மற்றும் தனியார் பயன்பாடு இவ்வளவு பெரிய அளவில் இருக்கும்போது, அதிகாரப்பூர்வ ஆவணங்களில் வெறும் 60 லட்சம் மெட்ரிக் டன்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

இவ்வளவு பெரிய வருவாய் இழப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற கணக்கு வழக்குகளைச் சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர், இந்த விவகாரத்தில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.