மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று திடீரெனச் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் டேங்கரில் இருந்த பெருமளவு எண்ணெய் சாலையில் ஆறாகக் கொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், எண்ணெய் கசிவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வாளிகள், கேன்கள் மற்றும் பாத்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சாலையில் கொட்டிய எண்ணெயைப் போட்டி போட்டுக்கொண்டு சேகரித்துத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.
இச்சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் டேங்கரிலிருந்து எண்ணெய் தொடர்ந்து வழிந்துகொண்டிருக்க, அதைச் சேகரிக்க மக்கள் முண்டியடிப்பதும், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து கூட்டத்தைக் கலைப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
சாலையில் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வீணாகக் கொட்டியதால் லாரி உரிமையாளருக்குக் கணிசமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்தும், யாருக்கேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH | Diesel Tanker Overturns On NH-46 In Shivpuri, Driver Seriously Injured; Villagers Gather To Collect Fuel#MadhyaPradesh #MPNews #Shivpuri pic.twitter.com/NJi4IgITnd — Free Press Madhya Pradesh (@FreePressMP) July 27, 2026 “>
சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்திலும் இதேபோல டீசல் டேங்கர் லாரி கவிழ்ந்து, கசிந்த டீசலை மக்கள் ஆபத்தை உணராமல் சேகரித்தது குறிப்பிடத்தக்கது. தீப்பற்றக்கூடிய அபாயம் இருந்ததால், அப்போது அதிகாரிகளே தலையிட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.
