ஜெய்ப்பூரில் இருந்து ஸ்ரீ கங்கானகர் நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பெண் ஒருவர், நள்ளிரவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைக் காணொளியாக வெளியிட்டு ரயில்வே நிர்வாகத்திற்கு எதிரான தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணித்த போது, அருகிலிருந்த கும்பல் ஒன்று மது அருந்திவிட்டுத் தகாத வார்த்தைகளால் பேசியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நள்ளிரவு ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், அங்கு குழந்தைகள் இருப்பதால் சத்தம் போட வேண்டாம் என்று தான் கோரிக்கை விடுத்தும் அவர்கள் கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபர்கள் தங்களுக்கு எதிராகப் புகார் அளித்தவரின் குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் அப்பெண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புப் பணியாளர்கள் யாரும் அங்கு இல்லாததால், டி.டி.இ மூலமாக ரயில்வே அதிகாரிகளுக்கு அவர் உடனே தகவல் தெரிவித்துள்ளார். எனினும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தும் எந்தவொரு காவலரும் உதவிக்கு வரவில்லை என்று அவர் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
அடுத்தடுத்து வரும் ரயில் நிலையங்களில் அதிகாரிகள் ஏறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், எந்த இடத்திலும் பாதுகாப்புப் பணியாளர்கள் வரவில்லை. இதனால் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து ரயில்வே நிர்வாகமும் அரசும் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது எனக் கேள்வி எழுப்பி, அவர்கள் மீது கடுமையான விமர்சன முன்வைத்துள்ளார்.
एक महिला जयपुर से श्रीगंगानगर के लिए ट्रेन से सफ़र कर रही थी। रात के 1 बजे कुछ लोग बगल वाली कम्पार्टमेंट में शराब पीकर गाली गलौज कर रहे थे। महिला ने उन्हें बोला ऐसा मत करो बच्चे है। फिर भी वो लोग नहीं माने। आरोप ये भी है कि एक भी पुलिस वाला नहीं है ,पूरे कोच में या ट्रेन में। pic.twitter.com/55O0lGoaUC — सीतामढ़ी जिला 🇮🇳 (@SitamarhiJila) August 22, 2026 “>
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், ரயில்வே தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வரவில்லை. மேலும், அந்த நபர்கள் உண்மையிலேயே மது அருந்தினார்களா என்பது குறித்துச் சுயாதீனமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
