உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்ச் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு வெளியே, குடும்பத் தகராறு காரணமாக மாமியாரும் மருமகளும் பொதுவெளியில் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பாரம்பரியமான முக்காடு அணிந்திருந்த மருமகள் ஒருவர், நடுவழியில் தனது மாமியாரைக் கன்னத்தில் மாறி மாறி அறைந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

காவல் நிலைய கொத்வாலி பகுதிக்கு உட்பட்ட நுழைவாயிலுக்கு வெளியே குடும்பப் பிரச்சினை காரணமாக இரு பெண்களுக்கும் இடையே திடீரெனக் கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது.

பேச்சு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மருமகள் முகத்தை மூடியவாறு மாமியாரை நோக்கித் தொடர்ந்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். பொதுமக்களும் அவ்வழியாகச் சென்றவர்களும் இந்த எதிர்பாராத சண்டையைக் கண்டு செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

சம்பவ இடத்திலேயே உடனடியாகத் தலையிட்ட காவல்துறையினர், சண்டையில் ஈடுபட்ட இருவரையும் விலக்கிவிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும், காவல் நிலையத்திற்கு வெளியே சிறிது நேரம் கடுமையான அமளியும் கூச்சலும் நீடித்தது.

“>

 

குடும்பச் சண்டையின் உச்சமாக நடுரோட்டில் அரங்கேறிய இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.