மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயப்பாக்கம் பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாகச் செயல்படவில்லை என்று பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக வந்த புகார்களைத் தொடர்ந்து, தொகுதி எம்.எல்.ஏ. ரேவந்த சரண் அப்பகுதிக்கு நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்பகுதியில் நீண்டகாலமாகத் தொடரும் வடிகால் அடைப்பு மற்றும் கழிவுநீர் தேங்கும் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில் எம்.எல்.ஏ. கள ஆய்வு நடத்தினார். அப்போது, கழிவுநீர் நிலையத்தின் கிணறுகளுக்குள் கழிவுகள் செல்வதற்கு முன்பாக, மணல் மற்றும் தேவையற்ற பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்காகத் தனியாக ஒரு வடிகட்டும் அறை அமைக்கப்பட வேண்டும் என்ற முக்கியத் திட்டம் ஆய்வின் போது முன்மொழியப்பட்டது.

பொதுமக்களுக்குத் துயரம் அளித்து வரும் தற்போதைய தொழில்நுட்பக் குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. ரேவந்த சரண் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

மேலும், இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தை எவ்விதத் தடையுமின்றி முழுமையான செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறும் அவர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

“>

 

மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று களத்தில் இறங்கி எம்.எல்.ஏ. மேற்கொண்ட இந்த விரைவான நடவடிக்கைக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.