உலக நாடுகள் அனைத்தும் தற்சமயம் 2026-ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்க, பாகிஸ்தான் மக்கள் மட்டும் தங்களது அசாத்திய சிந்தனையால் 2050-ஆம் ஆண்டிற்கான எதிர்கால உலகிற்குச் சென்றுவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியின் மேயர், அந்த நகரின் மிக நெருக்கடியான மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த வீதிகளுக்குச் சென்று பொதுமக்களின் உயிரைக் காக்கும் நோக்கில், ஒரு புதுமையான “சைக்கிள் மற்றும் பைக் ஆம்புலன்ஸ்” சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்சமயம் இணையத்தில் வெளியாகி, உலகளவில் நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளன கராச்சி மாநகரத்தின் பல பகுதிகள் மிகவும் குறுகலான தெருக்களையும், எப்போதும் கடுமையான டிராஃபிக் ஜாம் நிலவும் சாலைகளையும் கொண்டவையாகும். இதனால், அவசர காலங்களில் பிரம்மாண்டமான நான்கு சக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் நோயாளிகளின் இருப்பிடத்திற்குச் சென்று அவர்களை மீட்க முடியாமல் கடுமையான காலதாமதம் ஏற்பட்டது.
இந்த இக்கட்டான நிலைக்குப் புதிய தீர்வாக, 1122 அவசரச் சேவை பிரிவின் கீழ் இந்த இருசக்கர ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளது. இதில் முதலுதவிக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் தகவல் சாதனங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாகப் பொருத்தப்பட்டுள்ளனஇந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் இந்த சைக்கிள் மற்றும் பைக்குகளை ஓட்டிச் சென்று, குறுகலான சந்துகளுக்குள் புகுந்து மிகக் குறைந்த நேரத்தில் நோயாளிகளைச் சென்றடைந்து அவர்களுக்கு முதலுதவி வழங்கி நிலைப்படுத்துகின்றனர்.
“பாகிஸ்தானில் மட்டுமே இது போன்ற விசித்திரமான மற்றும் பயனுள்ள ஸ்மார்ட் ஓர்க்கைக் காண முடியும்” என்று இணையவாசிகள் பாராட்டி வரும் வேளையில், “உலகமே வியக்கும் அளவிற்கு தங்களது டிராஃபிக் பிரச்சனைக்குச் சரியான வழியைக் கண்டுபிடித்துள்ளனர்” எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
While world still in 2026 Pakistani’s are living in 2050
Futuristic Pakistan: Karachi’s mayor launches cycle ambulances. Only in Pakistan pic.twitter.com/2vEQMDhI50
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 20, 2026
“>
வெறும் நவீனத் தொழில்நுட்பங்களை மட்டுமே நம்பியிருக்காமல், உள்ளூர் தேவைக்கேற்பத் தனித்துவமான ஐடியாவைப் புகுத்தியுள்ள கராச்சி மேயரின் இந்த முயற்சி, தற்சமயம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
