மழைக்காலம் தொடங்கினாலே வீடுகளில் பூச்சிகள் மற்றும் சிலந்தை  தொல்லைகள் அதிகரிப்பது வாடிக்கையான விஷயம். குறிப்பாக, எதிர்பாராத நேரங்களில் கடித்தால் என்ன செய்வது என்று தெரியாமல் பலர் பதறிப்போய் தவறான சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். பெரும்பாலான  சிலந்தி  சாதாரணமானவை என்றாலும், சில நேரங்களில் அலட்சியமாக இருந்தால் பெரிய ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகரும் பிரபல மருத்துவருமான டாக்டர் ஜேம்ஸ் ஓ’டொனோவன் எச்சரித்துள்ளார்.

சால் புழு கடித்த உடனே என்ன செய்ய வேண்டும், எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறித்த முக்கிய விழிப்புணர்வு தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். சால் புழு கடித்த இடத்தில் சிறிய மட்டங்கள், தடிப்பு, கடுமையான அரிப்பு மற்றும் தோல் சிவந்து போதல் போன்ற அறிகுறிகள் பொதுவாகத் தென்படும்.

இப்படிப்பட்ட சூழலில் உடனடியாகப் பதற்றப்படாமல், கடித்த இடத்தை மிதமான சூடுள்ள நீர் மற்றும் சவக்காரம் கொண்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். இதனால் கிருமித்தொற்று பரவுவதைத் தவிர்க்கலாம். மேலும், அப்பகுதியில் வீக்கம் அல்லது எரிச்சல் இருந்தால் ஐஸ் கட்டிகளை ஒரு சுத்தமான துணியில் சுற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கலாம்.

எக்காரணம் கொண்டும் ஐஸ் கட்டிகளை நேரடியாகத் தோலில் வைக்கக் கூடாது. குறிப்பாக, அரிப்பு ஏற்படுகிறது என்று கடித்த இடத்தை அடிக்கடி சொறிவது புண்ணை மேலும் பெரிதாக்கி பெரிய இன்ஃபெக்ஷனை ஏற்படுத்திவிடும் என்பதால், அந்தத் தவறைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக சால் புழு கடித்து உண்டாகும் பாதிப்புகள் ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகிவிடும். இருப்பினும், மூச்சு விடுவதில் சிரமம், முகம் அல்லது தொண்டை பகுதியில் வீக்கம், கடுமையான காய்ச்சல், தலைச்சுற்றல் அல்லது மயக்கம் போன்ற ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

அதேபோல், கடித்த இடம் கருப்பாக மாறுவது அல்லது கொப்புளங்கள் தோன்றுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் ஒருபோதும் தாமதிக்காமல் உடனடியாகத் தகுந்த மருத்துவச் சிகிச்சையைப் பெறுவது மிகவும் பாதுகாப்பானது.