அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் நம்பிக்கையோடு சிகிச்சைக்காக வரும் இடம். அத்தகைய புனிதமான இடத்தில்கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், நோயாளிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததை சாதகமாக்கிக் கொண்டு, அவர்களின் தலைமாட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போன்களைத் திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திருடன் எந்தவித பதற்றமும் இன்றி, ஒவ்வொரு வார்டாகச் சென்று, நோயாளிகள் தூங்கிக்கொண்டிருக்கும்போதே அவர்களின் செல்போன்களை மிக லாவகமாக எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது.

“>

 

நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் நோயாளிகள் தங்களின் உயிரைக் காக்க மருத்துவமனையில் இருக்கும்போது, இவ்வளவு துணிச்சலாக ஒருவன் திருடிச் செல்வது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.