சென்னையில் சமீப காலமாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,04,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14291 ரூபாய்க்கும், ஒரு சவரன் 114328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,35,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
