தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயன்றதாக சமீப காலமாகவே செய்திகள் வலம் வரும் நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்தார். அவர் பேசியதாவது, தமிழகத்தை பொறுத்தவரையில் நிரந்தர எதிரியும் கிடையாது நிரந்தர கூட்டணியும் கிடையாது.
ஆனால் அதற்காக அதிமுக பக்கம் நாங்கள் செல்ல மாட்டோம் தனித்து நின்றே போட்டியிட்டு திமுகவை ஒரு வலிமையான இயக்கமாக மாற்றி காட்டுவோம். தமிழக மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் திருமயம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த பலர் மணல் கடத்தலில் ஈடுபடுகிறார்கள்.
தமிழக வெற்றி கழகத்தினர் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை செய்கிறார்கள். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என மேலிடத்திலிருந்து தங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். லஞ்சம் வாங்காத மற்றும் சிறுவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய விஜய் சார் யார் அந்த மேலிடம் உங்கள் ஆட்சி தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது.
நான் ஐந்து நிமிடம் கொளத்தூரில் பேசியதற்கு கொத்து பரோட்டா போட்டுவிட்டதாக பேசுகிறார். நீங்கள் பத்து நிமிடம் பேசி இருந்தால் உங்களை கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள். நீங்கள் எழுதிக் கொடுத்த ஐந்து நிமிட வசனத்தை மட்டும் தான் பேசி உள்ளீர்கள். மேலும் ஆறாவது நிமிடம் பேசி இருந்தால் உங்களுக்காக ஓட்டு போட வேண்டும் என நினைத்து மக்களே ஓடி இருப்பார்கள் என்றார்.
