இன்றைய காலகட்டத்தில் யாரையுமே நம்ப முடியாத அளவிற்கு மனிதநேயத்தைத் தவறாகப் பயன்படுத்தும் விசித்திரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் வேளையில், நங்க்லோய் பகுதியில் பசியோடு வந்த குழந்தைகளுக்கு உணவு கொடுத்த சலூன் உரிமையாளருக்கு நடந்த கொடூர ஏமாற்றுச் சம்பவம் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் உறைந்து போக வைத்துள்ளது.

நங்க்லோய் பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் உரிமையாளர், தனது கடைக்கு முன்னால் இரு குழந்தைகள் பசியோடு நிற்பதைக் கண்டு, அவர்களை அன்போடு உள்ளே அழைத்து வயிறார உணவு கொடுத்துள்ளார். ஆனால், அந்தப் பிஞ்சு முகங்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்த திருட்டுப் புத்தியை அவர் எதிர்பார்க்கவில்லை.

சாப்பாடு போட்ட உரிமையாளர் சற்றுப் பக்கவாட்டில் திரும்பிய தகுந்த வாய்ப்பைப் பார்த்த அந்தச் சிறுவர்கள், கடையின் லாக்கரைத் தேடித் திறந்து அங்கிருந்த பர்ஸ்ஸிலிருந்து ₹4,500 பணத்தை லாவகமாகத் திருடியுள்ளனர். பின்னர் எதுவும் தெரியாதது போல், “வயிறு நிறைந்தது” என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

 

“>

இந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்து இணையத்தில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், “மனிதநேயத்தை ஒரு போதும் விடாதீர்கள், அதே சமயம் எச்சரிக்கையையும் ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்” என்று நல்ல இதயங்களைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த நரகல் மனிதர்கள் குறித்துப் பெரும் பரபரப்போடு விவாதித்து வருகின்றனர்.