மருத்துவர் மற்றும் நோயாளிக்கு இடையிலான உறவு சிகிச்சை என்ற எல்லையைத் தாண்டி, பல நேரங்களில் உணர்ச்சிகரமான தருணங்களாக மாறுகிறது. சமீபத்தில் மருத்துவர் ஹர்ஷிதா குர்ஜார் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பலரது நெஞ்சைத் தொட்டுள்ளது.
கல்லீரல் பாதிப்பு காரணமாக 30 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வந்தபோது, அவரது மனைவி காட்டிய பொறுப்பும் அக்கறையும் அந்த மருத்துவரை ஆச்சரியப்பட வைத்தது. தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற எவ்வளவு செலவானாலும் சரி, எந்தப் பரிசோதனையாக இருந்தாலும் செய்யத் தயார் என்று அவர் உறுதியுடன் கூறியது, அந்தத் தம்பதியின் பிணைப்பை வெளிப்படுத்தியது.
இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்த மருத்துவர் ஹர்ஷிதா, மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். ஒரு சில நிமிட போதைக்காக அல்லது நண்பர்களுடன் ஜாலியாக இருப்பதற்காகச் செய்யும் தவறுகளால், அந்த நபர் மட்டுமின்றி அவரது குடும்பமே வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்று அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
நோயாளியின் மனைவி கஷ்டப்படுவதைப் பார்த்த மருத்துவர், “அந்தச் சில நிமிட போதை உங்களது குடும்பத்தினர் வாழ்க்கையை விட முக்கியமா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார். உங்கள் உடலைப் பேணுவது உங்களுக்காக மட்டுமல்ல, உங்களைச் சார்ந்திருக்கும் அன்பானவர்களுக்காகவும் என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, பலரைச் சிந்திக்க வைத்துள்ளது.
