ஒரு சாதாரண விடைபெறுதல் கண் இமைக்கும் நேரத்தில் எப்படி ஒரு கொடூரமான விபத்தாக மாறியது என்பதை விவரிக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வாசலில் நின்றபடி டாட்டா காட்டிவிட்டுத் திரும்பிய ஒரு சிறுவன் மீது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த இரும்பு கேட் அடியோடு சரிந்து விழுந்த நெஞ்சை உலுக்கும் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்த அந்தப் பிஞ்சுப் பையன், தந்தைக்கு கைகாட்டி விடைபெற்ற சில வினாடிகளிலேயே அந்தப் பெரிய கேட் அவனது உடலின் மீது மொத்தமாகச் சரிந்து விழுந்ததும், அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடிவந்து அவனைக் காப்பாற்ற முயன்ற காட்சிகளும் பார்ப்போரை மிரள வைத்துள்ளது.

“>

வீடுகளில் வைக்கப்படும் இரும்பு கேட்டுகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்தத் துயரமான விபத்து, இணையத்தில் லட்சக்கணக்கான நெட்டிசன்களை உறைந்து போக வைத்துள்ளது.