பெங்களூரு அருகே உள்ள நீலமங்கலா பகுதியில், கணவனுடன் ஏற்பட்ட தொலைபேசி வாக்குவாதத்தைத் தொடர்ந்து 31 வயதுடைய தனுஜா என்ற பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயணத்தின்போது அறிமுகமான தனுஜா மற்றும் ரவீந்திரா ஆகியோரின் காதல், பின்னர் கோயிலில் திருமணத்தில் முடிந்தது. ஆனால், ரவீந்திரா தனது குடும்பத்தினர் எதிர்ப்பைக் காரணம் காட்டி, தனுஜாவைத் தனியாக வாடகை அறையில் தங்க வைத்துள்ளார்.
சமூக அங்கீகாரம் கிடைக்காத ஏக்கம் மற்றும் கணவனுடன் இருக்க முடியாத விரக்தி காரணமாக, தனுஜா கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று, ரவீந்திராவைத் தன்னை வந்து பார்க்குமாறு அவர் அழைத்துள்ளார்; ஆனால், குடும்பத்தோடு இருப்பதைச் சுட்டிக்காட்டி ரவீந்திரா வர மறுத்ததால், விரக்தியடைந்த தனுஜா விஷம் குடித்து உயிரை மாய்த்துள்ளார்.
ரவீந்திராவுக்கு இறுதி மெசேஜ் அனுப்பிவிட்டு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தம்பதியினரிடையே நிலவிய இந்தச் சூழலும், தனிமையும் தனுஜாவை இந்த விபரீத முடிவுக்குத் தள்ளியதாகக் கூறப்படுகிறது. தற்போது இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
