புனேவின் எஃப்சி  சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட சாலைத் தகராறு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனில் பேசிக்கொண்டே ஸ்கூட்டி ஓட்டி வந்த இளைஞரின் வாகனம், மற்றொரு வாகனத்தின் மீது மோதியதே இந்த வாக்குவாதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

வாக்குவாதத்தின்போது, அங்கிருந்து கிளம்பும் அவசரத்தில் இருந்த அந்த இளைஞர், “ஆமாம், ஒட்டுமொத்த புனே நகரத்தையும் நான் தான் விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறேன்” என்று ஆணவத்துடன் பேசியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த ஆணவப் பேச்சும், சாலைப் போக்கிரித்தனமும்  இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் செல்போனில் படம் பிடித்து வெளியிட, நெட்டிசன்கள் அந்த இளைஞரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது மற்றும் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் தங்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களோ அல்லது புனே காவல்துறையின் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமோ இதுவரை வெளியாகவில்லை.