சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகும் மெட்ரோ ரயில் நிலைய வீடியோக்களின் வரிசையில், தற்போது மற்றுமொரு வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது.

இந்த வீடியோவில், மெட்ரோ நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் மிகுந்த அசாதாரணமான முறையில் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

மெட்ரோவில் பயணிக்கும் சக பயணிகளுக்கு, குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அந்த நபர் நடந்து கொள்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் செயல் சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மெட்ரோ நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும், இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது ஏன் துரிதமான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தில்லி மெட்ரோ ரயில் கழகத்திற்கு  புகார் தெரிவிக்கப்பட்டும், இதுவரை எந்தவொரு பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் பொதுவெளியில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, பொது இடத்தின் கண்ணியத்தையும் கேள்விக்குள்ளாக்குவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.