பெய்ஜிங்:
ஒரு ஜாலியான சுற்றுலா, இப்படி நடுரோட்டில்… இல்லை, நடுமேடையில் வைத்து கணவனுக்கு ‘பூசை’ வாங்கும் அளவுக்கு முடியும் என்று அந்த அமெரிக்க ஜோடி கனவிலும் நினைத்திருக்காது!
சீனாவின் பாரம்பரியக் கலைகளையும், கலாச்சாரத்தையும் ரசிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து சீனாவுக்குச் சுற்றுலா வந்திருந்தது அந்த கணவன்-மனைவி ஜோடி. அங்கு நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட கலாச்சார விழாவைக் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த விபரீதம் அரங்கேறியது.
மேடையில் விரிந்த வலை!
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த அந்த அமெரிக்க கணவனை மட்டும் மேடைக்கு அழைத்தனர் அங்கிருந்த கலைஞர்கள். அவரும், ஏதோ ஒரு ஜாலியான விளையாட்டு அல்லது சாதாரண நடிப்புப் போட்டி என்று நினைத்து, உற்சாகமாக மேடைக்கு ஓடினார்.
அங்கே அவருக்குப் பாரம்பரிய சீன உடைகள் அணிவிக்கப்பட்டு, சில சடங்குகள் செய்யப்பட்டன. அவரும் சிரித்த முகத்தோடு அவர்கள் சொன்னதையெல்லாம் செய்து கொண்டிருந்தார். ஆனால், தனக்கு என்ன நடக்கிறது என்று அவருக்குப் புரியும் முன்பே… அங்கு ஒரு பாரம்பரிய சீனத் திருமண சடங்கு (Mock Wedding) முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டிருந்தது!
மேடையில் பாய்ந்த சிங்கப் பெண்!
கீழே அமர்ந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க மனைவிக்கு, கணவன் மேடையில் வேறொரு பெண்ணோடு மணக்கோலத்தில் நிற்பதைக் கண்டதும் ரத்தம் தலைக்கேறியது! அது வெறும் நாடகம் என்று அவருக்குத் தோன்றவில்லை; தன் கணவன் தன் கண்ணெதிரேயே வேறொரு பெண்ணை மணந்துவிட்டதாகவே அவர் நினைத்தார்.
அடுத்த நொடி… ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த மனைவி, இருக்கையை விட்டு எழுந்து புயலாக மேடைக்கு நோக்கிப் பாய்ந்தார். மேடையில் நின்றுகொண்டிருந்த கணவனின் சட்டையைப் பிடித்து, அங்கேயே சரமாரியாக வெளுக்கத் தொடங்கினார்!
”என் கண்ணு முன்னாடியே உனக்கு வேறொருத்தியோட கல்யாணமா?” என்பது போல அவர் தன் கணவனை உலுக்கி எடுத்த வேகத்தில், கணவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
சிரிப்பில் மூழ்கிய அரங்கம்!
திடீரென மேடையில் அரங்கேறிய இந்த நிஜ சண்டையைப் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைவதற்குப் பதிலாக, விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். சிலர் இதுவும் அந்த நாடகத்தின் ஒரு பகுதிதான் என்று நினைத்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
🚨 चीन घूमने गए एक अमेरिकी बंदे को एक सांस्कृतिक कार्यक्रम के दौरान मंच पर बुलाया गया। उसे लगा कि यह सिर्फ एक सामान्य प्रस्तुति है, लेकिन बाद में पता चला कि यह प्राचीन चीनी शादी की रस्म का मंचन था।
यह देखकर उसकी पत्नी गुस्से में आ गई और मंच पर ही अपने पति को कुटने लगा, वहीं नीचे… pic.twitter.com/oOtxoHmpmV
— JIMMY (@Jimmyy__02) July 14, 2026
கணவன் தற்காப்புக்காக அலறியதும், கலைஞர்கள் ஓடிவந்து அந்த கோபக்கார மனைவியைத் தடுத்து, “இது வெறும் கலாச்சார நாடகம் தான், நிஜக் கல்யாணம் இல்லை” என்று விளக்கிய பிறகே அந்தப் பெண் அமைதியானார்.
சுற்றுலா வந்த இடத்தில், தெரியாமல் செய்த காரியத்தால் கணவனுக்குக் கிடைத்த ‘தர்ம அடி’ வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது!
