சென்னை: ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் மீதும், முதலமைச்சர் விஜய் அவர்கள் மீதும் வீண் பழி சுமத்த எதிர்க்கட்சியான திமுக எத்தனையோ வழிகளில் முயன்று வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் “ஒரு பெண்ணுக்கு முதலமைச்சர் கைகொடுக்கவில்லை” என்று பரப்பப்பட்ட அவதூறுக்கு, அந்தப் பெண்மணியே கொடுத்த நெகிழ்ச்சியான விளக்கமும், தவெக இளைஞர் வெளியிட்ட ஆதாரமும் எதிர்க்கட்சியினரை வாயடைக்கச் செய்துள்ளது!
அரைகுறை வீடியோவை வைத்து கிளம்பிய அவதூறு!
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சியான திமுகவினர் ஒரு வீடியோவைப் பகிர்ந்து வந்தனர். அதில், மக்கள் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் முதலமைச்சர் விஜய் அவர்களுக்குக் கைகொடுக்க கையை நீட்டுகிறார், ஆனால் விஜய் அவர்கள் அவருக்குக் கைகொடுக்காமல் கடந்து செல்வது போன்ற காட்சி இருந்தது.
இதைப் பார்த்ததும் எதிர்க்கட்சியினர், “பார்த்தீர்களா… ஆளுங்கட்சி முதலமைச்சரின் ஆணவத்தை! கைகொடுக்க வந்த பெண்ணைத் தவிர்த்துவிட்டார்” என்று சோசியல் மீடியாவில் வதந்திகளைப் பரப்பி அசிங்கமான அரசியல் செய்யத் தொடங்கினர்.
அம்பலமான உண்மை… நெகிழ்ந்த பெண்மணி!
எதிர்க்கட்சியின் இந்த அவதூறுகளை அடியோடு தவிடுபொடியாக்கும் வகையில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆதாரங்களுடன் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
அதில், முதலமைச்சர் விஜய் அந்தப் பெண்ணிற்குத் தற்செயலாகக் கைகொடுக்காமல் கடந்து சென்றிருந்தாலும், அதே இடத்தில் இருந்த மற்றொரு பெண்ணிற்கு மிகவும் அன்போடு கைகொடுத்து வாழ்த்தியுள்ளார் என்ற உண்மை வீடியோ அட்டாச் செய்யப்பட்டிருந்தது. அதாவது, அவர் வேண்டுமென்றே பெண்களைத் தவிர்க்கவில்லை என்பது இதன் மூலம் நிரூபணமானது.
அதைவிட முக்கியமாக, எந்தப் பெண்ணிற்கு விஜய் கைகொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் அனுதாபம் தேட முயன்றனவோ, அதே பெண்மணி மிகுந்த மகிழ்ச்சியோடு நேரில் தோன்றிப் பேசியுள்ளார். அதில் அவர்,
”அவர் எனக்குக் கைகொடுக்கவில்லை என்றாலும், எங்களைப் போன்ற சாமானிய மக்களை நேரில் வந்து சந்தித்தாரே… அதுவே எங்களுக்குப் பேரானந்தம்! எங்களின் முதலமைச்சர் விஜய் தம்பியை நேரில் பார்த்ததே எங்களுக்குப் பெரிய சந்தோஷம்!” என்று நெஞ்சாரக் கூறியுள்ளார்.
”இப்படியும் ஒரு அரசியலா?” – சீறிய இளைஞர்!
பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பெண்மணியே எந்தவித வருத்தமும் இல்லாமல் முதலமைச்சரின் வருகையைக் கொண்டாடும் போது, எதிர்க்கட்சியான திமுகவினர் இதைப் பெரிய பிரச்சினையாக்கி அரசியல் செய்ய முயன்றதை அந்த இளைஞர் தன் வீடியோவில் கடுமையாகச் சாடியுள்ளார்.
திமுகவை மக்களே expose பண்ண ஆரம்பிச்சுட்டாங்க! 🤭🤣 pic.twitter.com/sq0mmFPGiu
— TVK-WOMEN-WING (@MangoCityTVK) July 14, 2026
”இத்தனை கேமராக்கள் சுற்றிலும் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட பெண்மணியே மகிழ்ச்சியோடு இருக்கும்போது, எப்படி உங்களால் இப்படியொரு பொய்யான விமர்சனத்தை வைக்க முடிகிறது?” என்று அவர் எழுப்பிய காரசாரமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் எதிர்க்கட்சியினர் இப்போது விழிபிதுங்கி நிற்கின்றனர்.
உண்மையை உடைத்துக் காட்டிய இந்த வீடியோவை, தவெக-வினர் சோசியல் மீடியாவில் கெத்தாகப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்!
