மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்த பெண் ஒருவரை, கார் மூலம் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் காரில் தப்பிக்க முயன்றபோதும், குற்றம் சாட்டப்பட்ட நபர் அதிவேகமாக அவரைத் துரத்திச் சென்றுள்ளார். இறுதியில் அந்தப் பெண்ணின் காரை தனது வாகனத்தால் மோதி நிறுத்திய அந்த நபர், அவரைத் தாக்கி கொலை செய்ய முயன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
Nashik woman chased for 15 km after resisting molestation; suspect arrested via CCTV and dashcam footage. pic.twitter.com/3KGWlk2DVN
— WION (@WIONews) July 14, 2026
“>
இந்த கொடூரத் தாக்குதலில் காயமடைந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையைக் கடந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
மேலும் அதில் அந்த நபர் பெண்ணின் காரைத் துரத்திச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தன. அந்த சிசிடிவி ஆதாரம் மற்றும் வாகனப் பதிவு எண்களைக் கொண்டு தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீசார், சில மணி நேரங்களிலேயே குற்றவாளியைக் கைது செய்தனர்.
அதோடு அவர் மீது கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை முயற்சி, வழிமறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
