சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல்வேறு விதமான வினோத வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது நடுரோட்டில் ஸ்பைடர் மேன் உடையில் நபர் ஒருவர் டிரம்ஸ் இசைக்கு ஏற்ப வெறித்தனமாக பாங்க்ரா நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேன் உடையில் இருக்கும் அந்த நபர், எவ்வித தயக்கமும் இன்றி சாலையின் நடுவே நின்று இசைக்கு ஏற்ப துள்ளலாக ஆடும் காட்சிகள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
இந்த அசத்தலான நடனத்தைக் காண்பதற்காகவே அந்தச் சாலையில் சென்ற பொதுமக்கள் பலரும் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கு அலைமோதி நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தின் உடையில் பஞ்சாபி பாணி பாங்க்ரா நடனத்தை மிக நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் அவர் ஆடிய விதம், அந்த இடத்தையே ஒரு திருவிழா போல மாற்றியது. தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் குவித்து அசுர வேகத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
