வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில், சிறுவர்கள் மூவர் சேர்ந்து துணிகளால் ஆன கயிற்றைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆபத்தான ‘ஸ்டண்ட்’ முயற்சி இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உயரத்தில் இருந்த அலமாரி மீது ஏற, சுவரில் இருந்த மெல்லிய குழாயைப் பயன்படுத்தி ஒரு சிறுவன் ஸ்பைடர்மேன் போல ஏறியது பார்ப்பவர்களைப் பதறவைக்கிறது.
Definitely not their first time. 😂 pic.twitter.com/onmGCjX7sX
— Pratima Chauhan (@Pratimach_98) July 13, 2026
அலமாரி மீது ஏறிய பிறகு, கீழே இருந்த தம்பியை மேலே இழுக்க அவர்கள் மேற்கொண்ட அந்த ‘மிஷன் இம்பாசிபிள்’ பாணி முயற்சி, பார்ப்பதற்கு சாகசமாகத் தெரிந்தாலும், பெரும் ஆபத்தானது என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.
இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் @Pratima Chauhan என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. சகோதரர்களுக்கு இடையிலான இந்த அதிரடி கூட்டணியைப் பாராட்டி சிலர் கருத்துகளைப் பதிவிட்டாலும், குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் உரக்க வலியுறுத்தி வருகின்றனர்.
