பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிராமப்புறப் பகுதியில், பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டிய ராஜாசான்சி காவல் நிலைய ஆய்வாளர் ஹர்ஜித் சிங், சோதனைச் சாவடியில் இல்லாமல் காவல் நிலைய வளாகத்தின் பின் அறையில் மது போதையில் தூங்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

நள்ளிரவில் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட டி.ஐ.ஜி ஹர்மன்பீர் சிங் கில், “வெளியே நிலைமை தீவிரமாக இருக்கும்போது, கடமையை மறந்துவிட்டு எப்படித் தூங்கலாம்?” என்று பஞ்சாபி மொழியில் அந்த ஆய்வாளரைக் கடுமையாக வெளுத்து வாங்கியதோடு, அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த அதிரடிச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கடமை தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை தொடரும் என காவல் துறை எச்சரித்துள்ளது.