சமூக வலைதளங்களின் விசித்திரமான உலகில், மனிதர்கள் தங்களின் கற்பனைக்கும் எட்டாத பல ஆபத்தான காரியங்களைச் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ,  இணையத்தையே உலுக்கியுள்ளது.

பொதுவாகவே பாம்பு என்றபெயரைக் கேட்டாலே பெரிய பெரிய சூரர்களுக்கே வேர்த்து விறுவிறுக்கும் நிலையில், இந்த வைரல் வீடியோவில் உள்ள ஒருவர், தன்னைத் தாக்க வந்த ஒரு கொடூரமான விஷப்பாம்பைப் பிடிக்க முயல்கிறார். அப்போது அந்தப் பாம்பு கடுமையான கோபத்துடன் அந்த நபரைத் தீண்ட சீறிப்பாய்கிறது. ஆனால், சிறிதும் பயமின்றி  நொடியில் அந்த நபர், சீறிவந்த பாம்பை அப்படியே தனது வாயாலேயே கவ்விப் பிடித்து அமுக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by @ig.snr_10k

“>

‘ig.snr_10k’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான நெட்டிசன்களின் பார்வைகளைப் பெற்று வரும் இந்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சியைப் பார்த்த பலரும், “இவன் மனிதன் தானா அல்லது வேறு ஏதேனும் பிறவியா?” என்றும், “இயற்கையின் விதியையே இவன் மாற்றிவிட்டான்” என்றும் தங்களின் அதிர்ச்சியூட்டும் கருத்துக்களைப் பதிவிட்டு அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.