ராஜஸ்தான் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், அரசாங்க புரோட்டோகலை எல்லாம் ஓரமாக தூக்கி வைத்துவிட்டு, நேராக வந்து 80 வயது முதியவரின் குறையைக் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ள கலெக்டர் பிரதீப் கவண்டேவின் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைகால்களால் சரிவர நடக்க முடியாத 80 வயது பாட்டி ஒருவருக்கு, வயது முதிர்வு காரணமாகக் கைரேகை அழிந்து போனதால், கடந்த சில மாதங்களாக அரசு பென்ஷன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவரது விதவை மக்கள் அரசாங்க அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்து, இறுதியாகக் கலெக்டரைச் சந்திக்க வந்துள்ளார்.
இந்தத் தகவல் தெரிந்தவுடன் தனது ஏசி ரூமை விட்டு வெளியே ஓடிவந்த ஐஏஎஸ் பிரதீப் கவண்டே, பாட்டியின் குறையைக் கேட்டு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார். “உடனடியாகப் பாட்டியின் பென்ஷனை மீண்டும் தொடங்க வேண்டும்; அதுமட்டுமின்றி அரசு வீடு மற்றும் பிற திட்டங்களின் உதவிகளையும் உடனே வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
புகழ்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டினா தாபியின் கணவரான பிரதீப் கவாண்டே, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு முன் எம்பிபிஎஸ் படித்துப் பாராளுமன்றத்திற்கு நிகரான பதவிகள் இருந்தாலும், சாதாரண ஏழைக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்ததால் தான் இவரால் மக்களின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது என அங்குள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.
