ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக அறிமுகமாகி, முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்திய இளம் நடப்பு ஆல்-ரவுண்டர் ராமா கோஷ், தற்போது புனே ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகராக வேலை பார்க்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மெகா ஏலத்தில் சென்னை அணி இவரை 30 லட்ச ரூபாய் அடிப்படை விலைக்கு வாங்கிய நிலையில், நடப்பு சீசனில் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் போட்டியிலேயே அதிரடியாகப் பந்துவீசி விக்கெட் வீழ்த்தியதுடன், ஃபீல்டிங்கிலும் மிரட்டலான கேட்ச் பிடித்து அசத்தினார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதே போட்டியின் இறுதிப் பகுதியில் அவரது வலது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் பாதியிலேயே வெளியேறினார்.

 

View this post on Instagram

 

A post shared by CricTracker India (@crictrackerindiaofficial)

“>

தனக்குத் திருமணம் ஆகி ஒரே வாரமே ஆன நிலையில், காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் குடும்ப சூழ்நிலைக்காக தனது ரயில்வே வேலையைத் தொடர்ந்து வரும் இந்த இளம் கிரிக்கெட் வீரரின் நிலைமையைக் கண்டு, புனே ரயில் நிலைய ரசிகர்கள் அவருடன்செல்ஃபி எடுத்து தங்களது சோகத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.