உத்தரப் பிரதேச பிரதேசத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகித் தன்னைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமாகக் கொலை செய்து, வீட்டின் பாத்ரூமிலேயே 2 அடி ஆழத்தில் புதைத்து அதன் மேல் டைல்ஸ் ஒட்டி மறைந்த தையல் தொழிலாளியான மனைவி ரூபியால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியிருக்கிறது.
கம்ப்யூட்டர் வேலை பார்ப்பதாகப் பொய் சொல்லித் தன்னைத் திருமணம் செய்து கொண்ட சுரேந்திரன்,தொடர்ந்து வேலைக்குச் செல்லாமல் மாமனார் இறந்த பென்ஷன் காசையும் குடியே அழித்து வந்துள்ளார். இதனால் தனது இரண்டு பெண் குழந்தைகளைக் காப்பாற்ற ரூபி பகல் இரவாகத் தையல் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மே மாதம் பக்கத்து ஊருக்கு சென்ற சுரேந்திரன், அங்கு உறவினர்களிடம் தகராறு செய்து அடி வாங்கி வந்துள்ளார்.
அந்த ஆத்திரத்தில் வீட்டில் இருந்த ரூபாயை மிருகத்தனமாக அடித்ததால், பொறுமை இழந்த ரூபி தனது இரு மகள்களையும் பெரியப்பா வீட்டிற்கு அனுப்பிவிட்டு, சுரேந்திரனுக்குக் கொடுத்த உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை பாத்ரூமுக்குள் புதைத்துவிட்டு, அடுத்த நாளே கொத்தனாரை வரவழைத்து அதன் மேல் சிமெண்ட் தரை போட்டு டைல்ஸ் ஒட்டி மறைந்துள்ளார்.
தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்ட ரூபி, “இரவில் பாத்ரூம் தரையை உடைத்து கொண்டு என் கணவன் என்னை நோக்கி வருவது போல் பயமாக இருக்கிறது” என போலீசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
