அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரைத் துரதிர்ஷ்டவசமாக இழந்த இந்திய கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்து மண்ணிலும் அதே போன்றதொரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணியின் அதிரடி பேட்டிங் வரிசை முற்றிலும் சரிந்து வெறும் 76 ரன்களுக்கு ஒட்டுமொத்தமாக ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியின் இந்த வரலாற்றுச் சரிவுக்கு, பேட்டிங் வரிசையில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எடுத்த முடிவுகளே முக்கியக் காரணம் எனப் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
போட்டியின் 3-வது ஓவரிலேயே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், டாப் ஃபார்மில் துணை கேப்டன் திலக் வர்மாவுக்குப் பதிலாக அக்ஷர் படேலை 5-வது இடத்தில் கம்பீர் களம் இறக்கினார்; ஆனால் , அடுத்த ஓவரிலேயே அக்ஷர் படேல் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அவுட்டாகி வெளியேறினர்.
5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, அதிரடி ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவை அனுப்பாமல் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவை பேட்டிங்கில் புரமோட் செய்த கம்பீரின் முடிவு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
உலகக்கோப்பையை வென்ற பயிற்சியாளராக இருந்தாலும், பேட்டிங் வரிசையில் கம்பீர் செய்யும் இந்த தேவையில்லாத சோதனைகள் தான் இந்திய அணியின் தொடர் தோல்விகளுக்குக் காரணம் எனத் தற்போது சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
