வாழ்க்கையின் அந்திமக் காலத்தில் நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய 80 வயது முதியவர் ஒருவர், பசி கொடுமைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் நள்ளிரவு வரை டாக்ஸி ஓட்டும் நெஞ்சை உலுக்கும் நிஜக் கதை இணையவாசிகளைப் பெருமளவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொல்கத்தாவின் டம்டம் (Dum Dum) இரயில்வே லைன் பகுதியில் வசித்து வரும் 80 வயதான ரவீந்திரநாத் சர்க்கார் (Rabindranath Sarkar) என்பவர்தான் இந்த வறுமைப் போராட்டத்தின் நாயகன். இவருக்குக் குழந்தைகள் என்று யாரும் இல்லாத நிலையில், பழுதடைந்து உடைந்த கூரையைக் கொண்ட ஒரு சிறிய வீட்டில் தனது வயதான நோய்வாய்ப்பட்ட மனைவி சந்தியா சர்க்காருடன் வசித்து வருகிறார்.
மனைவியின் மருத்துவச் செலவிற்கும், அன்றாட சாப்பாட்டிற்கும் வேறு வழியில்லாததால், இந்த 80 வயதிலும் நடுங்கும் கைகளுடன் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கொல்கத்தா நகரில் டாக்ஸி ஓட்டி வருகிறார். கடுமையான உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் அவரது மனைவிக்குக் குறைந்தபட்ச மருந்து மாத்திரைகள் கூட வாங்க முடியாத அளவிற்கு இந்தத் தம்பதியினர் வறுமையின் உச்சத்தில் தவித்து வருகின்றனர்.
80-year-old Rabindranath Sarkar still drives a taxi from 6 AM to 10 PM just to survive.
His house roof is broken, his elderly wife Sandhya Sarkar is ill, and they can’t even afford medicine.
They live near the railway line in Dum Dum, Kolkata. No children. pic.twitter.com/UVSPGJDxx5
— Raghu (@IndiaTales7) July 8, 2026
சோசியல் மீடியாவில் இவர்களது தற்போதைய அவல நிலை குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், “அரசோ அல்லது தொண்டு நிறுவனங்களோ முன்வந்து இந்த முதிய தம்பதியினருக்கு உதவ வேண்டும்” என்று நெட்டிசன்கள் பலரும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
